அமைச்சர்களின் வாகனங்கள் குறித்து வாராவாரம் அறிக்கை தேவை! பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு!

போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்படாமல் பயணிக்கும் அமைச்சர்களின் வாகனங்கள் தொடர்பில் வாராந்தம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற ‘கவனமாக சென்று வாருங்கள்’ எனும் தேசிய வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு இணைவாக நடைபெறும் தேசிய வீதிப் பாதுகாப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பயங்கரவாத அச்சுறுத்தலில்லாத இந்தக் காலத்தில் முறையின்றி பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பிலும் அவ்வாறான வாகனங்களில் பயணிப்பவர்கள் பிரமுகர்கள்தானா என்பது தொடர்பாகவும் கவனித்துப் பார்க்கவேண்டும்.
குறித்த அறிக்கையைப் பொலிஸ் மா அதிபர் வழங்கியவுடன் அது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து உரிய தரப்பினரை வரவழைத்து தனிப்பட்டமுறையில் அவர்களுடன் கலந்துரையாடப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
|
|