அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்  – அரசாங்கம் 

Friday, April 8th, 2016

தேசிய அரசாங்கத்தில் தற்போது ஜனாதிபதி உள்ளடங்களாக 47 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 20 இராஜாங்க அமைச்சர்களும் 25 பிரதியமைச்சர்களும் காணப்படுவதாக அறிவித்துள்ள அரசாங்கம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அரசாங்கம் சபையில் அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல வினாக்களுக்கான நேரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒன்றிணைந்த பொது எதிரணியைச் சேர்ந்த மாத்தறை மாவட்ட எம்.பி. மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்றைய தினம்  தேசிய அரசாங்கத்தில் காணப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது இன்றைய தினம்  பதிலளிப்பதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் வாக்குறுதியளித்திருந்தார். ஆகவே அந்த எண்ணிக்கையை வெளிப்படுத்துங்கள் என கோரினார்.

இதன்போது ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக பதிலளித்தார்.  தற்போதுள்ள தேசிய அரசாங்கத்தில் உள்ளிட்ட 47 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் காணப்படுகின்றனர்.

20 இராஜாங்க அமைச்சர்கள் காணப்படுகின்றார்கள். 25 பிரதியமைச்சர்கள் காணப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கை இறுதியானதெனக் கூறமுடியாது.

எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்..

Related posts: