அமைச்சரவை பத்திரங்களை முறையாக தயாரிப்பதற்கான தகவல்களை வழங்குவது அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!
Monday, February 26th, 2024அமைச்சரவைப் பத்திரங்களை தாமதமின்றி சமர்ப்பிக்கும் பொறுப்பு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பத்திரங்களை தாமதமின்றி சமர்ப்பிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக்கலந்துரையாடலில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சரியான தகவல்கள் மற்றும் அனைத்து பின்னணி அறிக்கைகளின் அடிப்படையிலும் அமைச்சரவை பத்திரங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், சில தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் உண்மைகளை சரியாக ஆராயாமல் தவறான தகவல்களை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தவறாக வழிநடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
விடயத்தக்குப் பொறுப்பான அமைச்சரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சைப் பெறுப்பேற்ற நாளிலிருந்து 2023 ஆம் ஆண்டு இறுதி வரை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக 190 அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். அந்த அமைச்சரவை பத்திரங்கள் அனைத்தும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, தவறான மற்றும் அடிப்படையற்ற தகவல்களை அமைச்சரவையில் முன்வைப்பதன் விளைவுகள் கடந்த காலங்களில் காணப்பட்டதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இவ்வாறானதொன்று இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய செயலாளர், அமைச்சரவை பத்திரங்களை முறையாக தயாரிப்பதற்கான தகவல்களை வழங்குவது அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். அமைச்சரவை பத்திரங்களை தாமதமின்றி தயாரிப்பதற்கு கூட்டுச் செயற்பாடு அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|