அமைச்சரவை கூட்டம் நாளை – வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தகவல்!
Sunday, December 12th, 2021நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை, யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை தொடர்பில் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய தலைவருக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!
பயங்கரவாதிகளால் தேவாலயங்களுக்குள் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!
இலங்கையின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1068 ஆக உயர்வு - சுகாதார அமைச்சு!
|
|