அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்  – ஜனாதிபதி !

Wednesday, October 19th, 2016

இனி வரும் காலங்களில் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரையில் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்படி, வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி செவ்வாய்க் கிழமைகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் வேறு பணிகளில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி கோரியுள்ளார்.அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அமைச்சர்களுக்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டங்களின் போது நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் தம்மிடமும் பிரதமரிடமும் நேரடியாக பேசி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார்

mahinda-rajapaksa-will-be-defeated-again-sri-lankan-president-maithripala-sirisena

Related posts: