அமைச்சரவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது – விஜேதாச!

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்தனர் என்றே நாட்டில் பதவியில் இருந்த அனைத்து நீதியமைச்சர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முழு அமைச்சரவையும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலமான அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு பெறவில்லை. இந்த உடன்படிக்கை சட்டவிரோதமானது. சந்திரிக்காவின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்குமாறு கேட்ட போது ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்ச அரசாங்கத்தில் பெற்றுக்கொண்ட அமைச்சர் பதவியை 5 மாதங்களில் இராஜினாமா செய்தேன். தற்போது பதவியில் இருந்து விலக்கப்பட்ட அமைச்சராக உள்ளேன் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|