அமைச்சரவை அங்கிகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் – அமைச்சர் அர்ஜூன

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு கொடுப்பது தொடர்பான கிடைக்கப்பெற்றுள்ள அமைச்சரவை அங்கிகாரம் தொடர்பில், முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கூடிய அமைச்சரவையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்துகொள்ளாத நிலையில், துணை அமைச்சராக, பிரதி அமைச்சர் முதுஹெட்டிகம கலந்து கொண்டிருந்தார். இந்நிலையிலேயே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு கொடுப்பது சம்பந்தமாக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன தனியார் நிறுவனத்துக்கு கொடுப்பது தொடர்பில் சிக்கல் ஏற்படும் நிலைமை குறித்து பிரதி அமைச்சர் கடிதமொன்றை சமர்ப்பித்தும், இது தொடர்பில் இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதியா இவ்வாறு ஆலாசனை வழங்கினார் என அமைச்சர் அக்கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு கொடுப்பது குறித்து அமைச்சரவை அங்கிகாரம் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து, முழுமையான விளக்கத்தை தனக்கு வழங்க வேண்டும்” எனவும் அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|