அமைச்சரவையின் முடிவு: பணமோசடி ஏற்படும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை!

Sunday, April 5th, 2020

இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் வருவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை எடுத்த முடிவை அடுத்து சட்டத்துக்கு புறம்பான வகையில் நாணய பரிவர்த்தனைகள் இடம்பெறலாம் என்று சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொடரும் இலங்கை ரூபாவின் பெறுமதியிறக்கத்தை குறைக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதனால் பணச்சலவை சட்டத்தை மீறும் செயல்கள் இடம்பெறலாம் என்றும் சட்டத்தரணகள் கூறியள்ளனர்.

இந்தநிலையில் இது பணமோசடி மற்றும் பணச்சலவை போன்ற குற்றங்களுக்கு வழியேற்படுத்தும் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பணச்சலவைக்கு எதிரான சட்டத்தை மீறும் செயலாக மாறலாம் என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: