அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் சட்டத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உளளுராட்சி தேர்தல்களை பிற்போடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளிற்கான தேர்தல்களை மேலும் ஒருவருட காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் ஐலண்ட் நாளிதழிற்கு கருத்துதெரிவிக்கையில் தேர்தல் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்

தேர்தலை பிற்போடுவது தொடர்பான அமைச்சரவையின் முடிவை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: