அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஜித் நிவாட், ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு!

Monday, December 27th, 2021

இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினைகுறித்து கலந்துரையாடுவதற்காக, நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரச்சினை தொடர்பில், கூட்டிணைந்த கலந்துரையாடலை நடத்துவதற்காக, மத்திய வங்கி ஆளுநரையும், நிதி அமைச்சின் செயலாளரையும், அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்க, முன்னதாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: