அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களுக்கும் அழைப்பு – ஜனாதிபதி!

Tuesday, March 22nd, 2016

எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர்களையும் பங்கேற்கச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.

மாகாணசபைகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் அழைக்கப்படவுள்ளனர்.

ஹிக்கடுவவில் நேற்று (21) நடைபெற்ற 32 வது முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களையும் முதலமைச்சர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக மாகாணசபைகளில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Related posts: