அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின் போது கைய­டக்க தொலை­பே­சி­கள் பாவிக்க தடை!

Wednesday, June 21st, 2017

அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில்  இதற்கு பின்னர்  கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்டுவரவேண்டாம்  என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  நேற்­றைய அமைச்­ச­ரவை கூட்ட­த்தில்  கலந்­து­கொண்ட அமைச்­சர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தலை­மை­யி­லான வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று   நடை­பெற்­றது. இதில் அமைச்­சர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர்.  இதன்­போது கருத்­து­ரைத்த  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டில் ஏற்­பட்­டுள்ள  குப்பை பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வு­ கா­ண­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளார்.

அத்­துடன் அதி­க­ரித்து வரும் டெங்கு நோய்  தொடர்­பாக விரைந்து உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­ வேண்டும் என்றும்  ஜனா­தி­பதி  அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தெரி­வித்­துள்ளார். மேலும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் இறு­தியில் அமைச்­சர்­களை பார்த்து ஜனா­தி­பதி  ஒரு கோரிக்­கையை  முன்­வைத்­துள்ளார்.  அதா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில்  இதற்கு பின்னர்  கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்  என்று ஜனா­தி­பதி கோரிக்கை விடுத்துள்ளார்.  அதாவது நான் இதனை  உத்தரவாக கூறவில்லை. மாறாக கோரிக்கையாகவே விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

Related posts: