அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – கடற்படை தளபதி சந்திப்பு!

Thursday, June 20th, 2019

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, கடற்படைத் தலைமையகம் தெரிவித்திருந்தது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை பயணம் இத்துச் செய்யப்பட்ட சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

முன்னதாக, மைக் பொம்பியோ, இலங்கை பயணத்தின் போது, திருகோணமலை துறைமுகத்துக்குச் செல்வதற்கும் திட்டமிட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: