அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தகவல்!
Saturday, July 1st, 2023அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய பிரதான நாணய பெறுமதிகளுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடும்போது ரூபாவின் பெறுமதி 19.8 சதவீதமும், யூரோவுடன் ஒப்பிடும்போது 14.5 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்திய ரூபாவுடன் ஒப்பிடும்போது 16.5 சதவீதமும் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடும்போது 27.7 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாசகம் கேட்போருக்கு 1 500 சம்பளத்தில் வேலை - மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு!
மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் - அஞ்சல் திணைக்கள ஆணையாளர் த...
அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை சந்தை நிலைமைகளே தீர்மானிக்கின்றன – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வில...
|
|