அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

Saturday, May 16th, 2020

சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நேற்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 184.89 ரூபாவாகவும், விற்பனை விலை 189.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று நோயான கோவிட் -19 காரணமாக, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஏப்ரல் 8ம் திகதி 200 ரூபாவை தாண்டியது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் பல நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்தன. இதன்படி, இலங்கையில் மார்ச் 20ம் திகதி முதல் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 190 ரூபாவை தாண்டியுள்ளது.

ஜனவரி 1 முதல் மே 6 வரை, இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 3.9 வீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாளை காலை தளர்த்தப்படுகின்றது ஊரடங்குச் சட்டம் - தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை அவசியம் என வலியுறு...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் 228 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு – யாழ் சிறைச்சாலையிலிருந்தும் ஐவ...
மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - யாழ் ...