அமெரிக்க கிறீன் கார்ட் விண்ணப்பம்  உலாவுகின்றன போலி மின்னஞ்சல்கள் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல்

Sunday, May 7th, 2017

அமெரிக்காவின் Green Card Lottery விசா திட்டத்தின் கீழ்   2018 ஆம் ஆண்டின்  வாய்ப்புக்காக விண்ணப்பித்தவர்கள்  தமது விண்ணப்பங்களின் நிலைமைகளை இணையத்தளத்தின் ஊடாக சரிபார்க்க முடியும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று அறிவித்தது.
http://www.dvlottery.state.gov, என்கின்ற இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பத்தின் நிலை தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் எனவும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 30, 2018 வரை விண்ணப்பத்தை  உறுதிப்படுத்திய  ரசீதுகளை தம் வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம்  வெளியிட்ட அறிவிதலில் தேரரிவிக்கப்  பட்டுள்ளது.

Green Card Lottery விசா தொடர்பில் மோசடியான மின்னஞ்சல்கள் பெருமளவில்  விண்ணப்பதாறர்களுக்கு அனுப்பப் படு வாதகவும்   இது தொடர்பில் விண்ணப்ப தரகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Card Lottery விசா விண்ணப்பதாரர் களிடமிருந்து பணம் பறிக்கும் குழு ஒன்றே  இந்த மோசடி  மின்னஞ்சல்களை அனுப்புவதாகவும் Green Card Lottery விசா விண்ணப்பம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின்  எந்த தினைகளத்திடம் இருந்தும் எந்த அறிவிப்பு கடிதமோ, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புகளோ மேற்கொள்ளப் படமாட்டாது எனவும் விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பற்றிய விபரங்கள் http://www.dvlottery.state.gov என்கின்ற இணையத்தளத்தில் வெளியாகும் எனவும் தேரிவு செயப்படுபவர்கள் மட்டுமே மேலதிக நடை முறைகளை தொடர வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்ப தாரர்களிடமிருந்து முன் பணம் எதனையும் எந்த வடிவத்திலும் அமெரிக்க அரசாங்கம் கேட்கவில்லை எனவும்  இந்த வருடம் அக்டோபர் 1ம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப் படுவார்கள் எனவும் அப்போது மட்டுமே  அமெரிக்க தூதரகத்திற்கு நேரடியாக $ 330 டொலர் பணம்  செலுத்த வேண்டும், “எனவும்  தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படின் ,  www.travel.state.gov என்கின்ற அமெரிக்க அரச இணையத்தளத்திலோ அல்லது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் வலைத்தளமான  http://lk.usembassy.gov  மூலமும் அறிந்து கொள்ளலாம் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது,

Related posts: