அமெரிக்க கடற்படையின் கப்பல் 5 வருடங்களின் பின்னர் கொழும்பு வருகை!

Saturday, March 26th, 2016
இன்று அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
2011 ஒக்டோபரிற்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இது உள்ளது. கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல் மற்றும் பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வோசிங்டனில் நடைபெற்ற இரு பங்காளித்துவ உரையாடலின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைகின்றது.

 

“இலங்கை போன்ற பிராந்திய பங்காளர்களுக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக இந்த அமெரிக்க கடற்படை கப்பலின் விஜயம் அமைந்துள்ளது” என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்தார். புளு ரிட்ஜ் கப்பலின் 900 மாலுமிகள், இலங்கையின் கடற்படையினருடன் இணைந்து இலங்கையின் துடிப்பான கலாசாரம் மற்றும் அதுசார்ந்த மக்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். மேலும் சமுதாய நிலையம் ஒன்றின் சுவர்கள் மற்றும் தளபாடங்களை புதுப்பித்தல், விளையாட்டு மைதான உபகரணங்களை அமைத்தல் மற்றும் தேவையுடையோருக்கு உணவு வழங்கல் போன்ற தன்னார்வ செயற்பாடுகளிலும் மாலுமிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

a524e540-e6fa-4ce6-9e46-98468bfc4dee

அமெரிக்காவின் 7வது கப்பல் படையணியின் கட்டளைத் தளபதி, வைஸ் அட்மிரல் ஜோசப் M.C.கொய்ன் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த புளு ரிட்ஜ் கப்பலானது இந்தோ-ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் பேணுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11-14ஆம் திகதிகளில் காலித் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த யு.எஸ்.எஸ் ஃபோர்ட் (எப்.எப்.ஜி 54) கப்பலே கடைசியாக இலங்கை வந்திருந்த அமெரிக்க கடற்படை கப்பலாகும்.

Related posts: