அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் குழு இலங்கை வருகை!

Friday, October 23rd, 2020

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே குறித்த உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக இலங்கை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: