அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து!

Wednesday, June 19th, 2019

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 20 மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் விஜயத்தில் ஈடுபடவுள்ளதால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஆசிய விஜயத்தின்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: