அமெரிக்க இராஜாங்க உயர் அதிகாரி இலங்கை வருகை!

அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வரும் வியாழனன்று இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் துணை செயலாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளதுடன் வர்த்தக சமுகத்தினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் ஆரம்பிக்கப்பட் ஆசியா உடனான இணைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் மியன்மார் விஜயத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை இலங்கைக்கு வர உள்ளார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்களை ஈடுப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|