அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இவ்வாரம் இலங்கை வருகை – அமெரிக்கா வெளியுறவு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, October 22nd, 2020

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தியா, இலங்கை , மாலைதீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி முதலில் இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு மைக்பொம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலர் மாக் எஸ்பர் ஆகியோர் விஜயம் செய்து தமது அமைச்சு மட்டத்திலான பேச்சுக்களை முன்னெடுப்ப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்வார் என்றும் அமெரிக்க வெளியுறவு திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கான பயணத்தின் பின்னர் மாலைதீவு  மற்றும் இந்தோனேசியாவுக்கும் அவர்கள் பயணங்களை மேற்கொள்வர் என அமெரிக்க வெளியுறவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: