அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி!
Saturday, October 8th, 2016அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்கச் செயன்முறைகள் தாமதமடைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவியுள்ள இனவாதக் கொள்கையே காரணம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.இந்த விஜயத்தின் ஓரங்கமாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அரசியலமைப்பு உருவாக்கம், அதிகாரப் பரவல், யுத்தக் குற்ற விசாரணை போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்று இந்தக் கலந்துரையாடலின்போது ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் காணப்படுகின்ற உள்ளக இனவாத நிலையே இவற்றிற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.எனினும் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் இறையான்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் விடயங்களை தேசிய அளவில் முன்னெடுக்க முடியாது என்று ஜோன் கெரியிடம் விளங்கப்படுத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது
Related posts:
|
|