அமெரிக்க அரசுடனான ஒப்பந்தம் இலங்கையைப் போர்ப் பூமியாக்கும் – தயாசிறி ஜெயசேகர!

இலங்கை அரசு அமெரிக்காவுடன் செய்து கொள்ளவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை இலங்கையைப் போர்ப் பூமியாக மாற்றிவிடும்.
இந்தியா, சிங்கப்பூர் உடன்படிக்கையை விடவும் மோசமானது, அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கையே என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர எச்சரித்துள்ளார்.
இலங்கை அரசும் அமெரிக்காவும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத்தினர், இராணுவத் தளபாட, ரேடியோ கதிரலை பரிமாற்ற உடன்படிக்கை என்ற பெயரில் இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது. இந்த உடன்படிக்கை பற்றிய பேச்சு 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்த உடன்படிக்கையைச் செய்துகொண்டால் அது தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும். பன்னாட்டுக் கதிரலைகள் எமது நாட்டில் பரப்பப்படுவதும் தகவல் பரிமாற்றம் செய்வதும் எமது தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும். ஏற்கனவே ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனாவுக்கு விற்றமை எமது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு நிகராக இந்தியாவைத் திருப்திப்படுத்த வடக்கு – கிழக்கு நிலங்களை விற்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை இலங்கையின் சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்தி வருகின்றது. இலங்கையில் அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உண்மைகளைக் கூற வேண்டும் என்றார்.
Related posts:
|
|