அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா தெரிவிப்பு!
Wednesday, November 11th, 2020அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெளிவுபடுத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நண்பன், சகா என்ற அடிப்படையில் தேசிய இறைமை, சுதந்திரம் மற்றும் பேண்தகு அபிவிருத்தியில் அனைவரையும் உள்வாங்கும் அணுகுமுறையை அமெரிக்கா ஊக்குவிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அந்த கொள்கைகளின் பின்னால் அணிதிரளுங்கள் என்ற அழைப்பே தவிர அமெரிக்காவின் நேச நாடுகளுக்கான வேண்டுகோளில்லை என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வதே அமெரிக்காவின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|