அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி!
Sunday, December 24th, 2017
பொருளாதார வளம் மற்றும் வறுமையற்ற வகையில் மிகவும் காத்திரமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா அரசாங்கத்தின் Millennium Challenge Corporation Board (MCC) நிதியுதவியை வழங்கியுள்ளது.
இலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு ஜனநாயக மேம்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை இலங்கை அரசாங்கம் வலுவான முறையில் முன்னெடுக்கும் வகையில் அமெரிக்கா இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் உதவி வருகின்றது.
சமகால நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியல் பொருளாதார மறுசீரமைப்பு நிலையான அமைதியுடன் பொருளாதார மேம்பாடு விடயங்களில் கண்டுள்ள முன்னெற்றத்தை கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இந்த சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
Related posts:
மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் - அமைச...
நீங்கள் கேட்ட தலைவர் நான் - நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன் - சு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - முக்கிய கலந்துரையாடல்களுக்கு அழைப்பு!
|
|