அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல்– பல லட்சம் மக்கள் பாதிப்பு!

Friday, September 14th, 2018

 

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று(14) புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, கடும் காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்ட தாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி மாநில கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

Related posts: