அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட1.5 மில்லியன் மொடனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன!

Friday, July 16th, 2021

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மொடனா கொவிட்-19 தடுப்பூசிகளில் 1.5 மில்லியன் டோஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கட்டார் ஏயர்வேஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு  இன்று  காலை கொண்டு வரப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்தின் தடுப்பூசி டோஸ், பகிர்வுப் பொறிமுறையின் கீழ் அமெரிக்காவினால் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இதில் 7 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: