அமெரிக்காவின் புதிய அதிபரை வாழ்த்திய இலங்கையின் தலைவர்கள்!
Wednesday, November 9th, 2016
அமெரிக்க 45 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கம் அவருடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பேஸ்புக் மூலம் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேருந்து தீ வைப்பு!
2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு...
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ...
|
|