அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு போர்க் கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

Monday, May 13th, 2019

அமெரிக்காவினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான ‘ஷர்மன்’ என்ற கடற்பாதுகாப்பு போர் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

போர் ஆயுதங்களைக் கொண்டுள்ள இந்த கப்பல் 115 மீட்டர் நீளமானதுடன் இது இலங்கை கடற்படையினரிடம் காணப்படும் மிகப்பெரிய கப்பலாகும்.

இலங்கை கடற்படையின் செயற்பாட்டு திறனை விரிவுபடுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் கடற்படை சம்பிரதாயங்களின் படி கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. இந்த கப்பலின் கட்டளையிடும் தளபதியாக கப்டன் ரோஹித்த அபேசிங்க செயற்படும் அதேவேளை அக்குழுவில் 22 அதிகாரிகளும் 111 கடற்படையினரும் உள்ளனர்.

கடலின் ஆழமான பகுதிகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இதனைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

Related posts: