அமெரிக்கத் தூதுவர் – வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Monday, August 23rd, 2021

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை ஆகஸ்ட் 20 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தைத் தணித்தல் மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்த்தல் ஆகியவற்றுக்கு நல்கப்பட்ட ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அமெரிக்காவிற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்..

பொருளாதார அபிவிருத்தி சபையின் அபிவிருத்தி அதிகாரிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக பார்ட்னர் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி சபை, யு.எஸ்.எயிட் மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுக்கு இடையே சமீபத்தில் எட்டப்பட்ட முத்தரப்பு ஒத்துழைப்புக் கடிதத்தை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் வரவேற்றார். அமெரிக்காவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளையும் இதன்போது அமைச்சவர் பீரிஸ் வரவேற்றார்.

அத்துடன் அமெரிக்க – இலங்கை கூட்டாண்மைப் பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு மற்றும் அமெரிக்க – இலங்கை துறைசார் உரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்களும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: