அமெரிக்கக் கப்பல் இலங்கை வருகை பயணம்

நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கென அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் லேக் எரி (USS Lake Erie) 14 நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்காவில், மனிதாபிமான உதவிப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்தப் போர்க்கப்பல் கொழும்பு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
360 அமெரிக்க கடற்படையினர் இந்தப் போர்க்கப்பலில் கொழும்பு வந்துள்ளதாகவும் இவர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபடவுள்ளதுடன், ஸ்ரீலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த போர்க்கப்பல் யூன் 25 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு !
புதிய அரசியலமைப்பின் மூலம் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : 2021 இல் தேர்தல் நடை...
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு - சுகாதார அமைச்சர் அ...
|
|