அமுலில் இருக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க விரும்பவில்லை – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க விரும்பவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை தளர்த்தப்படுவதைப் பார்க்க விரும்புவதாகவும், கட்டுப்பாடுகள் முதலீட்டாளர் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

ப்ளூம்பெர்க் மாக்கெற் ஏசியா (Bloomberg Markets: Asia) உடனான செவ்வியின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்  –

முதலீட்டாளர்கள் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கை நிலைகளைப் பொறுத்த வரையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகையினால் மத்திய வங்கி அதன் பொருளாதார ஸ்திரத்தன்மை சாலை வரைபடத்தை உருவாக்கும் போது, அது குறித்த தெளிவான வழிகாட்டுதலை கொடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் “நாங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், இலங்கை ரூபாய் நிலையானதாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ள அவர், எந்த கூடுதல் இறக்குமதியும் அதை சேதப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதை அறிந்திருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், இதற்கான காலக்கெடு வரும் நாட்களில் மத்திய வங்கியால் வெளியிடப்படும் சாலை வரைபடத்தின் மூலம் வெளிப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: