அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Thursday, December 13th, 2018

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையும் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளதுடன் அன்னாரின் இறுதிக் கிரியைகளிலும் பங்கெடுத்தனர்.

முன்பதாக யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்.கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் புகழுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அவரது இழப்பால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

சமயக் கிரியைகளைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் ஊர்தி பவனியாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு இடம்பெற்ற சமயக் கிரியைகளைத் தொடர்ந்து அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான அமரர் கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கடந்த 9 ஆம் திகதி  உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில் கொழும்பு கல்கிஸையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக  வைக்கப்பட்டிருந்த அமரர் சிறி ஐயாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

viber image8

viber image05

07

viber image04

06

01

Related posts: