அமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, February 9th, 2020

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகர நிர்வாக செயலாளரும் கட்சியின் வல்வெட்டிதுறை நகரசபை உறுப்பினருமான திருமதி இந்திரன் கைலாஜினி அவர்களின் அன்புத் தாயார் அமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்திய அமரர் பாலேந்திரன் தங்கரத்தினம் இன்று அதிகாலை காலமானார்.

இந்நிலையில் வல்வெட்டித்துறை கொம்மாந்துறையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இங்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், யாழ் மாநகர நிர்வாக செயலாளர் நந்தன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: