அமரர் நல்லதம்பி மரியசீலனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

அமரர் நல்லதம்பி மரியசிலனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
வேலணை – மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ்மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்..
நிண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அமரர் கடந்த 19ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார். அன்னார் கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|