அமரர் தோழர் செல்வம் அவர்களின் ஊறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்!

Friday, March 11th, 2022

இறுதி மூச்சுவரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் வழிமுறையை நேசித்த அமரர் கதிர்காமு ரட்ணரதி எனப்படும் தோழர் செல்வம் அவர்களின் மானிப்பாயில் அமைந்துள்ள இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்மன இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலப் பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான EPRLF அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் செல்வம், பின்னாட்களில் ஈழமக்கள் ஜனநாயகக்  கட்சியில் (ஈபி.டி.பி.) தன்னை இணைத்துக் கொண்டு மரணமடையும் வரை கட்சியின் செயற்பாடுகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் வழிமுறைக்கும் மன உறுதியோடு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர் செல்வம் ஜெர்மனில் திடீர் சுகயீனம் காரணமாக மரணமடைந்தார் என்பதுடன் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 16.03.2022 – புதன்கிழமை  இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: