அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

Sunday, May 28th, 2017

காலஞ்சென்ற அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம்(28) செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாவதி சிவபாலன் இம்மாதம் 25 ஆம் திகதி காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிலையில் இறுதி அஞ்சலி செலுத்திய டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

சமயக் கிரியைகளைத் தொடர்ந்து கொழும்பு கல்கிசை பொதுமயானத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்பட்டு இடம்பெற்ற இறுதி நிகழ்வுகளிலும் செயலாளர் நாயகம் கலந்து கொண்டார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

காலஞ்சென்ற அமரர் திருமதி. கமலாவதி மருத்துவர் சிவபாலனின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.