அமரர் தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, December 30th, 2016

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப அமைப்புகளில்  ஒன்றான ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின்  முக்கிய உறுப்பினருமான தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே அமரர் தங்கமகேந்திரனின் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழகம் சென்னையில் நேற்றையதினம் காலமான தங்கமகேந்திரனின் திருமலையில்  அமைந்துள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதி புஸ்பராசா அன்னாரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

15726771_1314293595310871_9182568930437904596_n

image-0-02-06-eefb2bf43dbe34ee41ac5c83c4971dd62eca55cefdcf94291a3ecb584eaf030f-V

image-0-02-06-200afb4573ecf1f934aed1566d9a193aa8a8179003b76528d83a9926c42c90f7-V[1]

image-0-02-06-b639464db4a939e032e06d562f4a5f82d7baab99f1bbb89c1c1c9cd7ba2537c7-V

Related posts: