அமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் ஓய்வு பெற்ற உப- தபாலதிபரும்கிறின் விஸ்வா நிறுவத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான ஐயாத்துரை சௌந்தரராஜா அவர்கள் இன்று (26.12.2018) காலமானார்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்துடன் அவருக்கு எமது இதய அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.
அத்துடன் அன்னாரது இழப்பால் துயரம் சுமந்து தவிக்கும் உறவினர்கள் , நண்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
வட்டுக்கோட்டை சிவன்கோவிலடியில் வசித்துவந்த ஐயாத்துரை சௌந்தரராஜா அவர்கள் சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
காலஞ்சென்ற ஐயாத்துரை சௌந்தரராஜா அவர்கள் DD தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜனந்தன் அவர்களின் அன்புத் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) முற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|