அமரர் சிவபாதத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Saturday, June 18th, 2016

காலஞ்சென்ற அமரர் பொன்னையா சிவபாதத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணம் மூத்தவிநாயகர் வீதி, நல்லூரில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (18) சென்ற டக்ளஸ் தேவானந்தா இறுதி  அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளையதினம் நடைபெறவுள்ளன. அமரர் சிவபாதம் பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0123 copy

 

Related posts: