அமரர் குமாரசாமியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, March 12th, 2017

அமரர் சுப்பிரமணியம் குமாரசாமியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

இரசாசாவின் தோட்டம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் இளைப்பாறிய உப அதிபராக கடமையாற்றியிருந்த அமரர் குமாரசாமி நேற்றையதினம்(11) காலமாகியிருந்த நிலையில் அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளையதினம்(13) இடம்பெறவுள்ளன்.

DSCF1071

DSCF1084

DSCF1089

Related posts: