அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி

Wednesday, May 17th, 2017

காலஞ்சென்ற அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா அங்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

தீவகம் வேலணையை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள அமரர் இராஜரத்தினம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.அமரர் இராஜரத்தினம் நேற்றையதினம் காலமாகியிருந்த நிலையில் இறுதிக்கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளன.

Related posts: