அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!

காலஞ்சென்ற அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது..
கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(30) கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் , கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன் மற்றும் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்..
பிரபல சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்றுமுன்தினம் கொழும்பில் தனது 84 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் கொக்குவிலிலில் நடைபெற்ற நிலையில் இறுதி அஞ்சலி செலுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டனர்.
Related posts:
|
|