அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Tuesday, June 13th, 2017

காலஞ்சென்ற அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷன் நேற்றைய தினம் அகாலமரணம் அடைந்த நிலையில் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் நடைபெற்றன.

இறுதி நிகழ்வில் கட்சியின் யாழ்ப்பாணம் நகர நிர்வாக செயலாளர் இளங்கோ (றீகன்) கலந்துகொண்டார்.

Related posts: