அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேசிய திட்டமிடல் துறைக்கு முதன்மை!

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேசிய திட்டமிடல் துறைக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த துறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இயங்குகிறது. இதன்படி 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான செயற்றிட்டங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டிருந்தால், அதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தேசிய திட்டமிடல் துறையில் அங்கீகாரம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறைந்த பட்சம் ஒரு பில்லியன் ரூபாய் (ஆயிரம் மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு நிதியுதவிக்கும் தேசிய திட்டமிடல் துறையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களத்தின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|