அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
Tuesday, August 17th, 2021அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்குதல், செயற்றிறன் மற்றும் உயிர்ப்பான பொறிமுறையினூடாக மக்கள்மயப்படுத்தப்பட்ட பொருளாதா அபிவிருத்தியை ஏற்படுத்தி, ஜனாதிபதியின் பணிப்புரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஒருங்கிணைத்தல், செயற்றிட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தவிர , ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திட்டத்தில் மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதியினால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக செயற்படுத்துவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை வழிநடத்தும் பொறுப்பும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|