அபிவிருத்தி இலக்கை அடைய ஜேர்மன் முழுமையான உதவி?

Sunday, October 16th, 2016

இலங்கை அபிவிருத்தி இலக்கை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் முழுமையான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சருக்கும் ஜேர்மனிய தூதுவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் தூதுவர் இதனை கூறியுள்ளார்.ஜேர்மனிய உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ளனர்.

இதனால், அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜதந்திர மட்டத்திலான உதவிகளை வழங்குவது மிகவும் முக்கியமானது எனவும் ஜேர்மனிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உலகில் முன்னணி நாடுகள் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடுகளை செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதற்கு ஜேர்மன் அரசின் உதவி இலங்கைக்கு அவசியம் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fotor0424230533 copy

Related posts:


நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்லைனில் பதிவு செய்ய - தலைமை சார்ஜென்ட் ஆர்ம்ஸ் நரேந்திர தெரிவிப்பு!
பயணத் தடை நீக்கப்பட்டதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ...
சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு- முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...