அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய திட்டம்!
Tuesday, October 25th, 2016நாட்டின் சகல மாவட்டங்களிலும் நிலவும் அபிவிருத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய திட்டம் செயற்பட திட்டமிட்டப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொலநறுவை திம்புலாகல அலஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடமைப்பு கிராமத்தையும் ஜனாதிபதி மக்களுக்காக கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் சகல மாவட்டங்களிலும் நிலவும் அபிவிருத்தியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தின் கீழ் செயற்பட முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சர்வதேச சமூகத்திடமிருந்து பாரிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. பாரிய முதலீட்டு திட்டங்களை விட கிராமிய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அபிவிருத்தி திட்டங்களே நாட்டுக்கு பொருத்தமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் ஆரம்பித்த தேசிய மர நடுகைத் திட்டம், மின்சார உற்பத்தி திட்டம் என்பன மக்களின் வாழ்வை வலுப்படுத்த உதவும் முதலீடுகளாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
Related posts:
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதி மக்களது வாழ்வியல் நிலைமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!
சிவில் சமூகம் - இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் - பாதுகாப்பு செயலாளர் கமல் குண...
|
|