அபிவிருத்தியாகிறது பால் சேகரிக்கும் மத்திய நிலையங்கள்!
Friday, June 22nd, 2018பசும்பால் மூலமான தயாரிப்புக்களை அதிகரிப்பதற்காக 30 பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களும் 6 பால் பதனிடும் நிலையங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மட்டக்களப்பு, கடுவல, அத்தனகலை, பொலநறுவை, வாரியபொல மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் இந்த நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவற்றுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதன்மூலம் கிராம பிரதேசங்களில் சேகரிக்கப்படும் பசும்பால் மூலமான தயாரிப்புக்களை அதிகரிப்பதன் ஊடாக பாற்பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
4000 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு - டெங்கு நோய் தடுப்பு பிரிவு!
தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன...
கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்ற புதிய சட்டம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|