அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தேவை – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Sunday, July 17th, 2022

வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும்,  நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர் .

இதேவேளை  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை  தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

000

Related posts: